புதன், 18 ஜனவரி, 2017

கம்பர் காட்டும் விலங்கு பறவைகளுக்கு இடையிலான சகோதரத்துவம்

செ.சக்தி கலா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,
பெரியார் பல்கலைக் கழகம்,சேலம்-11
முன்னுரை
                உலக இலக்கிய வரிசையில் போற்றுதலுக்குரிய காப்பியங்களில் கம்பராமாயணமும் ஒன்றாகும்செம்மொழியாகியத் தமிழ் இலக்கியவானில் தன்னிகரற்ற சிறப்புகள் பெற்றவர் கவிச்சக்ரவர்த்தி கம்பர். வால்மீகியின் இராமகாதையை முதல் நுhலாகக் கொண்டு, வழிநுhலாக இயற்றப்பட்ட போதும் இராமாயணக்கதையை காவியமாக இயற்றப்பட்டுள்ளமை வேறு எந்த நுhலுக்கும் இல்லாத தனிப்பெரும் பெருமையாகக் கொள்ளலாம்இக் காப்பியத்தின் சிறப்புகளுள் ஒன்றாக அமைந்தது பிற மனிதர்களிடம் அன்புகாட்டி அவர்களையும்  நட்பாகவும்,சகோதரராகவும் ஏற்றுக்கொள்ளும் உயரிய மனநிலையினைக் காப்பியமெங்கும் நம்மாள் உணரச் செய்துள்ளார்கவிச்சக்ரவர்த்தி கம்பர்.   உடன் பிறந்தவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை காட்டுவதோடு நில்லாமல் நட்புறவின் மேன்மையை விளக்குவதாகவும் அமைந்துள்ளதுஇத்தகு சிறப்பான செயல்பாட்டைக் காட்டும் கம்பர், இதற்கு மாறான சிந்தனை கொண்ட சகோதரர்களையும் காண்பிக்கின்றார்அண்ணன் தம்பியர்களாக பிறந்து பகையாளர்களாக இருக்கும் வாலி, சுக்கீரிவன் ஆகிய இருவர்கிடையேயும் சகோதரப் பாசத்தை வலியுறுதியுள்ளமையை இவண்  காண்போம்.

சுக்கீரிவன் அறிமுகம்
                கம்பர், சுக்கிரீவன் குறித்து முதன்முதலில் ஆரணிய காண்டத்தில் கவந்தன் சவரி வாயிலாக அறிமுகப்படுத்துகின்றார்சீதையைப் பிரிந்ததனால் துன்பம் அடைந்த இராமன் இலக்குவனோடு தென் திசை நோக்கி சீதையைத் தேடிக் கொண்டு வருகின்றான்வழியிடையே தன்னால் சாபம் நீங்கப்பெற்ற கவந்தன், சுக்கிரீவனைத் துணை கொண்டு சீதையைத் தேடியடையும்படி சொல்கின்றான்இதனை,
சவரி பிறப்பு நீங்கு படலத்தில்  சவரி விராலைமலைக்கு  வழி கூறும்போது,
கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நப்பின் இனிது அமர்ந்து அவனின்ஈண்ட
வெதிர்பொரும் தோளினானை நாடுதல் விழுமிது   (1)    என்றான்.
                “துணை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத்துளக்கு இல்  குன்றம் (2)
என்று குறிப்பிடுகின்றார்.
                கவந்தனும்   சவரியும்   கூறியதனைக் கொண்டு   சுக்கிரீவனின் அறிமுகம் தெளிவாகிறது.
வாலி சுக்கிரீவன் பிறப்பு
வாலி மூத்தவன் , சுக்கிரீவன் இளையவன்வாலி இந்திரன் ஆசியால் பிறந்தவன்சுக்கிரீவன் சூரியன் ஆசீயினால் பிறந்தவன்அனுமன் படலத்தில், அனுமன் இராமனுக்கு சுக்கிரிவன் குறித்து சொல்லும்போது,
                “இரவிதன் புதல்வன் தன்னை
                இந்திரன் புதல்வன் என்றும்
                பரிவு இலன் சீற (3)
என்று வாலி சுக்கிரீவன் பிறப்பினைக் குறிப்பிடுகின்றான்.
வாலியின் சிறப்பு
                வாலி எல்லையற்ற வலிமையுடையவன். சிவபிரானின் அருளைப் பெற்றவன்சிவபக்தன் என்பதைஅட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்  என்ற வரியின் மூலம் அறியலாம்வாலில் பலம் உள்ளவன் வாலிவலிமை மிக்க இராவணனின் இருபதாகச் சேர்ந்து விளங்கிய தோள்கைளை ஒருசேரப் பொருத்தும்படி தன் வாலால் கட்டிப் பணித்து இராவணனைத் தோற்கடித்தவன் ஆவான்அசுரர்களும் முயன்று வழி இல்லாதவராக நிற்ப, தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமுதெழச் செய்தான்இதனைக் கம்பர்,
                “கழறு தேவரோடு அவுணர் கண்ணின் நின்று
                உழலும் மந்தரத்து உருவு தேய, முன்
                அழலும் கோள் அரா அகடு தீ விட
                சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.”
என்று குறிப்பிடுகின்றார்.
                கம்பர், அனுமனின் மூலம் வாலியின் சிறப்பினை நட்புக்கோட் படலத்தில் பன்னிரெண்டு பாடல்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
வாலி வதம்
                வானர இன அரசன் வாலியும், சுக்கிரீவனும் அண்ணன் தம்பியர். வாலிக்கும்  மாயாவி என்ற அரக்கனுக்கும் ஏற்பட்ட சண்டையில் மாயாவி வாலிக்குப் பயந்து ஒருமலைக் குகைக்குள் சென்று ஒளிந்து கொள்கிறான்வாலி சுக்கிரீவனை அம்மலைக்குகை வாயிலில் காவலுக்கு வைத்துவிட்டு குகைக்குள் சென்று மாயாவியுடன் சண்டையிட்டான்நீண்ட  நாட்களாகியும் வராது போகவே சுக்கிரீவன் பெரியோர் பலர் அறிவுரையின்படி கிட்கிந்தைக்கு மன்னன் ஆனான்பின்பு பல மாதங்கள் கழித்துத் திரும்பிவந்த வாலி சுக்கிரீவனைத் தவறாக எண்ணி அவனுடன் சண்டையிட்டான்உடன்பிறந்தோன் பலம் அறிந்து பயந்து சுக்கிரீவன் உருசியமுக மலையில் சென்று மறைந்து வாழ்ந்தான்நடந்தவைகளைக் கேள்விபட்ட இராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றான்அவன் இறக்கும் நிலையில் தம்பிக்கு ஆறுதல் கூறி வாழ்த்தி உயிர்விடுகிறான்.
சுக்கிரீவன் இராமனிடம் தன்நிலை கூறல்
சுக்கிரீவன் இராமனிடம் முன் பிறந்தவனான வாலி பின் பிறந்தவனான என்னை வருத்தினார்ஓடியவனைத் துரத்தி வருத்துதல் போர்முறைக்குப் பழியாகும் என்பதையும் உணராத வாலியின் முறையற்ற செயலைச் சுக்கிரீவன் உணர்த்தினான்அதோடு இராமனிடத்துசரண்  உனைப்புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம்என்றான்.
                சுக்கிரீவன் இராமனிடம் பேசும்போது ஒருமுறைக் கூட வாலியைக் கொன்றுவிடு என்று கூறவில்லைஅனுமன் சில இடங்களில் வாலியைக் கொல்லும்படி வேண்டினான்ஆனால் சுக்கிரீவன் அவ்வாறு வேண்டவில்லைஇது சுக்கிரீவனின் சகோதர அன்பினைக் காட்டுகிறது.
வாலியின் சகோதரப்பாசம்
                மாயாவியுடன் வாலி சண்டைக்குச் செல்லும் போது தம்பி சுக்கிரீவனை மாயாவி நுழைந்த குகை வாயிலில் காவலுக்கு வைத்து விட்டுத் தான் மட்டும்  உள்ளே செல்கிறான்.
இதனை,
                “…………அப்பிலனுள் எய்தியான்
                நெய்தின் அங்கு அவற் கொணரவென் நோன்மையால்
                செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா
                வெய்தின் எய்தினான் வெகுளிமேயினான்(5)
என்ற பாடல்வரிகள் மூலம் பகைவனுடன் போரிட்டுத் தனக்கு என்னத்தீங்கு ஏற்பட்டாலும், தன் தம்பிக்குத்  தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று என்னும் வாலியின் சகோதர மேன்மையினை அறியமுடிகிறது.
சுக்கிரீவனின் சகோதரப்பாசம்
                குகைவாயிலில் நின்றிருந்த சுக்கிரீவன், நீண்ட நாட்களாகியும் தன் தமையனைக் காணாது மனம் கலங்கினான்அவன் கலக்கத்தைக் கம்பர், “சோகம் எய்தினார் துணை துளங்கினார் “ (6) என்பார்.
                சுக்கிரீவன் குகையினுள் சென்று என் தமையனைத் தேடுவேன் அவன் இறந்து போயிருந்தால் அவனைக் கொன்ற பகைவனைக் கொல்வேன்அப்பகைவனைக் கொல்ல இயலாதெனின் நானும் போரில் இறப்பேன் என்று அக்குகையினுள் நுழையப் புகுந்தான்இதனை,  22 222  
                “………  அவ்வழி இரும்பிலம்
                சென்று முன்னவன் தேடுவேன் அவற்
                கொன்றுளான் தனைக் கொல ஓணாது எனின்
                பொன்றுவேன் எனப் புகுதல் மேயினான் (7)
என்ற வரிகளின் மூலம் அறியமுடிகிறது.
                வாலி, சுக்கிரீவன் இருவரும் போருக்குமுன் கொண்ட சகோதர அன்பினை கம்பர் விளக்கியுள்ளார்.
இராமனின் வாக்குறுதியும், வாலியின் இறப்பும்
                சுக்கிரீவனுக்குஉரிய தாரமாம் உருமையையும்  ஆட்சியையும் வாலி கவர்ந்து கொண்டான் என அனுமன் சொல்லக் கேட்ட இராமன்
                “ஈரேழ் உலகமும் ஒன்று திரண்டு அவனுக்கு உறுதுணை
                யாகவரினும் அவற்றை ஒழித்துக்கட்டி கிட்கிந்தை
                 அரசோடு உன் மனைவியை மீட்டுத் தருகிறேன். (8)
என்று உறுதி கூறுகின்றான்.
                வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் கடும்போர் நிலவுகிறதுவாலி, சுக்கிரீவனுடைய வலிமை தளர்ந்து விடும்படி செய்ய, சுக்கிரீவன் இராமனை அடைந்து உதவி வேண்டினான்இராமன் கொடிப்பூ அணிந்து, போர்புரியச் சொல்கிறான்அவ்வாறே சென்று சுக்கிரீவன் வாலியோடு மோதினான்இராமன் மறைந்து நின்று வாலியின் மார்பில் அம்பினைச் செலுத்துகிறான்வாலி  மண்ணில் சாய்கிறான்.
                வாலி, இராமன் அறமற்ற செயலைச் செய்துவிட்டதாக பலவாறு இகழ்ந்து பேசுகிறான்இறுதியாக வாலி, இராமனிடத்து தகாத வகையில் மறைந்து நின்று எய்யக் காரணம் யாது என வினவ, அதற்கு இலக்குவன்,
                “முன்பு, நின் தம்பிவந்து சரண்புக, “ முறை இலோயைத்
                தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினான்செருவில் நீயும்,
                அன்பினை உயிருக்கு ஆகி, “அடைக்கலம் யானும் என்றி
                என்பது கருதி அண்ணல், மறைந்து நின்று எய்தது (9)
 என்றான்.
                இலக்குவனின் இக்கூற்றால் வாலி, இராமன் தவறு செய்யான் என எண்ணம் கொண்டான்இராமனுடைய குணச்சிறப்புகளை  முன்னர் ஒருவாறு அறிந்திருந்தாலும் இராமனை இழித்துரைத்தவன், பின் இராமன் கூறிய மொழிகளால் அவன் நல்லறிவு பெற்றான்இராமனின் பெருமையை வாலியின் கூற்றாக கம்பர்,
                “இந்தனன் பின்னும்; எந்தை! யாவதும் எண்ணல் தேற்றக்
                குரங்கு எனக் கருதி, நாயேன் கூறிய மணத்துக் கொள்ளேல்,
                அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அருமருந்து அனைய ஐயா!” (10)
என்று சுட்டுவதாகக் குறிப்பிடுவார்.
                இராமனைப்  பழித்துரைத்தமைக்காகத் தன்னைப் பொறுத்தருள வேண்டுமென இப்பாடலில் வாலி வேண்டி நின்றதனை அறியமுடிகிறது.
உடன் பிறப்புப் பாசத்தால் சுக்கிரீவன் துயருறுதல்
                இராமனின் அம்புபட்டுக்  கிடந்த வாலியைக் கண்ட நிலையில், சுக்கிரீவன் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.  ‘வாலியின் மார்பிலிருந்து பெருகியகுருதியினைப் பார்த்து; உடன் பிறந்தான் என்னும்   அன்பாகிய கயிற்றால் கட்டுண்ட, அந்தத் தம்பியான சுக்கிரீவனும் தன் கண்களினின்று கண்ணீர் வடித்துநீண்ட  நிலத்தின்  மீது  வீழ்ந்தான்.
 இதனைக் கம்பர்,
                “வாசத் தாரவன் எனும் மலைவழங்கு அருவி
ஓசைச் சோரியை நோக்கினார்; உடன்பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அத்தம்பியும், பசுங்  கண்
நேசத் தாரைகள் சொரிதர, நெடுநிலம் சேர்ந்தான்.”  (11)
எனக் குறிப்பிடுகின்றார்.
வாலியை  எதிர்த்த சுக்கிரீவன், இராமனின் அம்புபட்டு வீழ்ந்தபோது, அவன் கண்களில் இருந்துவந்த கண்ணீர் போலியானதன்று  என்பதை   இவ்வரிகளின் மூலம் அறியமுடிகிறது.
தீங்கு எண்ணியவனுக்கும்  நன்மை செய்தவன்
                “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
                 நன்னயம் செய்துவிடல் (12)
என்ற வள்ளுவனின் குறளுக்கு ஏற்ப வாலி,
                இராமனிடத்து என் தம்பியாகிய சுக்கிரீவன், என்னைக் கொல்லுதல் பொருட்டு உன்னை அழைத்துக்கொண்டு வந்தான்.   தொன்று தொட்டுச் சிறுமையுடையதாய் வரும் குரங்கினத்தோடு ஆலோசனை செய்த செயலால் பயனில்லாத அரசாட்சியை எனக்கு அளித்துவிட்டான்ஆகையால் இனிமேல் இதனினும் மேலான உதவி அவன் எனக்குச் செய்யக் கூடிய தொன்றும் இல்லை என்றான். இதனை,
                “கொற்றவ! நின்னை, என்னைக் கொல்லிய கொணர்ந்து, தொல்லைச்
                சிற்றினைக் குரங்கினோடும் தெரிவு உறச் செய்த செய்கை,
                வெற்று அரசு எய்தி, எம்பிவீட்டு அரசு  எனக்கு  விட்டான் (13)
என்பதை இவ்வரிகளின் மூலம் அறியமுடிகிறது.
                சுக்கிரீவன் வாலிக்கு தீமைசெய்தாலும், வாலி இறுதியில் அவன்மீது கோபம் கொள்ளாதுஅன்பு செய்தான்இதனால் சுக்கிரீவன் நாணம் அடைந்து வருந்தி நின்றான் என்பதனையும் அறியமுடிகிறது.
வாலி தம்பியின் நல்வாழ்வுக்காக இராமனை வேண்டுதல்
                வாலி, தன் இறப்புக்குப் பின்னரும் தம்பி எந்த  இன்னலுக்கும் உட்படக்கூடாதென எண்ணி, எந்த இன்னலும் சுக்கிரீவனை அனுகாதிருக்க தன்னால் இயன்ற மட்டும் முயல்கிறான்மரணதருவாயிலும் முயன்று செயல்படும்   சகோதரனாக  வாலியைக்  கம்பர்,
                “ஓவிய உருவ நாயேன் உனது ஒற்று பெறுவது
                பூ இயல் நறவம் மாந்தி புத்திவேறு உற்றபோழ்தில்
                தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என்மேல்
                ஏவிய பாழ் என்னும் கூற்றினை ஏவல் (14)
வேண்டி நின்றான் என்பார்.
                வாலிக்குத்  தன் தம்பிமீதுள்ள அன்பையும் அவன் இயல்பை அறிந்திருந்த தன்மையையும் இவ்வரிகள் உணர்த்துவதனை அறியமுடிகிறதுசுக்கிரீவன் தவறு செய்யினும் தன்மீது அம்பு செலுத்தியது போல் அவன்மீதும் செலுத்தவேண்டாம் என வேண்டுவது வாலியின் பெருந்தன்மையினையும் அன்பையும் காட்டுகிறதுமேலும்வாலி   இறுதியாக, இராமனிடத்து அனுமனை உனது கையில் ஏந்தியுள்ள வில்லாகிய கோதண்டமே என நினைப்பாயாகபின்னும் என் தம்பி சுக்ரீவனை உன் தம்பியருள் ஒருவனாக நினைப்பாயாகஇவர்களைப் போன்றவர்களாய் ஒப்பற்ற ஒப்பற்ற  துணைவர்கள் வேறு பிறர் இலர் என்று கூறினான்.
                தன்னை பிரிந்து சுக்ரீவன் வருந்துவானாதலின் அத்துன்பம் போக்க அவனைத் தம்பியாக ஏற்குமாறு இராமனை வேண்டிய வாலியின் சகோதர அன்பின் ஆழத்தைக் கம்பரது வரிகளைக் கொண்டு அறியமுடிகிறது.
வாலி தம்பிக்கு  கூறிய அறிவுரைகள்
                சுக்கிரீவனிடத்து வாலி, தம்பி ! இராமன் உனக்குச் செய்த உதவிகளை மறக்காமல் அவனுக்காக வேண்டிய சமயத்தில் உயிரையும் கொடுப்பாயாகஅரசாட்சியைப் பெற்ற மகிழ்ச்சியில் மனம் களித்து அறிவு தளர்ந்து இராமனை இகழாமல் அவன் திருவடிகளை நீங்காமல் வாழ்வாயாக என்றான்இதனை
                “கைதவம் இயற்றி, யாண்டும் கழிப்ப அருங் கணக்கு- இல்தீமை
                வைகலும் புரிந்துளாரும், வான் உயிர் நிலைய, வள்ளல்
                எய்தவர் பெறுவர் என்றால், இணை அக்கிறைஞ்சி ஏவல்
                செய்தவர் பெறுவதுஐயா! செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ !”
என்றும்,
                “மத இயல் குரக்குச் செய்கை மயர்வொடு மாற்றி, வள்ளல்
                உதவியை உன்னி, ஆவி உற்றிடத்து உதவுகிற்றி,
                பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்தயாவும்
                சிதைவு இல செய்து, நெய்தின் தீர்வு அரும் பிறிவு தீர் (15)
என்று அறிவுரைகள் கூறினான்.
                வாலி தன் தம்பியின் மீது கொண்ட அன்பும் அக்கறையின் மிகுதிப்பாடே அறிவுரைகளாக வழங்கப்படுவதனை கம்பர் விளக்குவதனை அறியமுடிகிறது.
வாலியின் வாழ்த்து
                வாலியின் அன்பின் மிகுதி வாழ்த்தாகி வந்தது.   தம்பி! நீ இம்மை மறுமை இன்பங்களைப் பெற்றாய்இனி இராமனின் கட்டளைகளை ஏற்று   நடந்து மூன்று உலகங்களிலும் மேன்மை அடைவாயாக என்று வாழ்த்தியதனைக் கம்பர்,
                “ இருமையும் எய்தினாய், மற்று இனிச் செயற்பாலது  எண்ணின்
                திருமறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை
                ஒருமையின் நிறுவி, மும்மை உலகினும் உயர்தி அன்றே (16)
என்று காட்டுகிறார்அதோடு வாலி தன் அன்பின் உச்சநிலையினை வெளிப்படுத்தினான்சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலப்படுத்துகின்றான்.
                “மன்னவர்க்கு அரசன் மைந்த ! மற்று இவன் சுற்றத்தோடும்
                உன் அடைக்கலம் என்று உய்த்தேர உயர்கரம் உச்சி வைத்தான் (17)
என்பதன் மூலம் புலப்படுகிறது.
                சுக்கிரீவன் தன் தமையனின் இறப்பிற்காகவும், அந்த இறப்பிற்குத் தான் காரணமானதையும் எண்ணி வருந்தினான்.   ஆனால் வாலியோ அத்தகைய  சுக்கிரீவனை, இராமனிடத்து அடைக்கலப்படுத்திய மனநிறைவுடன் வீடுபேற்றினை அடைந்தான்.
சம்பாதிசடாயு
                விலங்கினங்களாகிய வாலி, சுக்கிரீவனிடத்து சகோதர அன்பினை நிலைநிறுத்திய கம்பர், பறவையாகிய கழுகினத்துள்ளும் சகோதர அன்பின் ஆழத்தைப் புலப்படுத்தியுள்ளார்.
                கம்பராமாயணத்தில் தம்பி சடாயுவை தீயையும் தீய்க்கும் சூரிய கிரணங்களில் இருந்து பாதுகாத்தலால்; தான் சிறகிழந்து வீழ்ந்த சம்பாதியின் சகோதர அன்பு சிறந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
                ஆரணிய காண்டத்தில், இராவணன் சூழ்ச்சி செய்து சீதையைத் தூக்கிச் செல்லும்போது, இராவணனை சடாயு தடுத்தான்சடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான் இராவணன்சம்பாதி என்கிற சடாயுவின் அண்ணன்சடாயுவுக்கு இராவணனால் மரணம் ஏற்பட்டது  கேட்டு வருந்தினான்.    பின் சீதையின் பொருட்டு  தெய்வ மரணம் அவன் எய்தியதை நினைத்து  ஆறுதல் அடைந்தான்சம்பாதி தன் அன்பான தம்பியின் மரணத்தை நினைத்து கடல்போலக் கண்ணீரைப் பெருக்கினான்  என்பதைக் கம்பர்,
                “உடலினை வழிந்துபோய், உவரி நீர் உக
                கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்
என்றும்,
                “உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான்;
                மழுங்கிய  நெடுங் கணின் வழங்கும் மாரியான்;
             புழுங்குவான், அழுங்கினான்; புடவிமீதினில்,
            முழங்கி வந்து இழிவது ஓர் முகிலும் போல்கின்றான்(18)
என்று குறிப்பிடுகின்றார்இதன்மூலம் பறவைகளுக்கும் சகோதரப் பாசமுண்டு என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வலியுறுத்தியுள்ளார்.
முடிவுரை

                விலங்கினமாகிய வானரகுலத்தில் தோன்றியவருக்கும் கோபமும், மூர்க்க குணமும் உள்ளதைக் கம்பர் இயல்பாகக் குறிப்பிட்டுள்ளார்.  ‘ ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில்பங்காளி என்பர்ஆனால் இக்குணங்களையும் தாண்டி சகோதரப்பாசமே வாலி சுக்கிரீவனிடம் சிறந்து காணப்படுவதை உணர முடிகிறதுஇராம சகோதரர்களோடு இவர்களின் சகோதர அன்பின் ஆழத்தையும் கம்ப காவியத்தின் வழி அறிய முடிகிறது.