திங்கள், 26 டிசம்பர், 2016

புறநானூறு – கபிலர் பாடல்களில் புலப்பாட்டு நெறி

புறநானூறுகபிலர் பாடல்களில் புலப்பாட்டு நெறி
முனைவர் வீ.மோகன்,
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ் உயராய்வு மையம்,யாதவர் கல்லூரி, மதுரை -14.

                கபிலர் பாண்டிய நாட்டு மதுரை நகருக்குக் கிழக்கில் உள்ள திருவாதவ10ரில் பிறந்தவர் என்ற செய்தி வழி வழியாக நிலவி வருகிறதுதிருவாதவ10ர்க் கல்வெட்டுக்கள்தென் பறம்பு நாட்டு வாதவ10ர் என்று குறிக்கின்றனஇப்பறம்பு நாடு வேள்பாரி என்ற வள்ளலுக்கு உரியதாய் இலங்கியதுபுலவர் கபிலர் வேள்பாரியிடம் நெருங்கிய நட்புக் கொண்டவராய் விளங்கினார்அவன் இறந்த பின்பு அவன் மக்களை அழைத்துச் சென்று மலையமான் திருமுடிக்காரியின் மைந்தர்க்கு மணம் முடித்து வைத்தார் என்பர்.
             
பாரியின் மகளிரை மூவேந்தர் மணந்து கொள்ள விரும்பினர்அவன் அவர்க்கு அம்மகளிரை மணம் செய்து கொடுக்க விரும்பாது மறுத்தான்ஆனால் மூவேந்தரும் பாரியின் பறம்பு நாட்டை முற்றுகையிட்டனர்அப்போது கபிலர் பாரியின் குணநலன்களைச் சிறப்பித்துப் பாடினார்அவற்றைப் புறநானூறு சிறப்புற விளக்குகிறது.
                கபிலர் சேரநாட்டு மன்னனான செல்வக்கடுங்கோ வாழியாதனைச் செந்தமிழால் பாடினார்அவன் பெரிதும் மகிழ்ந்து நூறாயிரம் பொன் தந்தான்.  ‘நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணில்பட்ட நாட்டுப் பகுதியையெல்லாம் அவர்க்கு அளித்தான் என்று பதிற்றுப்பத்துப் பதிகத்தால் தெரிய வருகிறது.
                பாரிமகளிரை மணம் செய்து தந்தப்பின்பு திருக்கோவலூரின் அருகில் ஓடும் பெண்ணை ஆற்றின் கரையில் அமர்ந்து வடக்கிருந்து உயிர்விட்டார்அவ்விடத்தில் இன்று ஒரு கற்பாறை உள்ளதுதிருக்கோவலூர்க் கல்வெட்டு இச்செய்தியைத் தெரிவிக்கின்றது.
                ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்குக் குறிஞ்சிப்பாட்டை இயற்றினார்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானஇன்னா நாற்பது இவரால் பாடப்பட்டதாகும்கலித்தொகையில் குறிஞ்சிக்கலி இவரால் பாடப்பட்டதுகுறிஞ்சித் திணையைப் பாடுவதில் கபிலர் சிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
                கபில் பாடியவை என்று தமிழ் இலக்கியத்தில் அறியப்படுபவை மொத்தம் 278 பாடல்களாகும். அவை:
                நற்றிணை                                                   : 20
                குறுந்தொகை                                         : 29
                கலித்தொகை                                          : 29
                ஐங்குறுநூறு (குறிஞ்சி)                                : 100
                அகநானூறு                                              : 16
                புறநானூறு                                                                : 30
                திருவள்ளவமாலை                         : 01
                இன்னாநாற்பது                                    : 41
                பன்னிருபாட்டியல்                            : 12
                (நூற்பாக்கள்)                                           278       
பன்னிரு பாட்டியலில் இவர் பெயரோடு சில நூற்பாக்கள் உள்ளனஇவர் சிவபெருமான்,முருகன், விநாயகர்,பலதேவன் ஆகிய இறைவனைப் பாடியுள்ளார்.
கபிலரால் பாடப்பட்டவர்கள் அகுதை,இருங்கோவேள், ஓரி, சேரமான் கடுங்கோ வாழியாதன்,சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி,விச்சிக்கோன்,  வேள்பாரி,வையாவிக் கோப்பெரும்பேகன் ஆகியோராவர்இவரால் பாடப்பட்டவை கொல்லிமலை, பறம்புநாடு,பரம்புமலை, முள்ளுர்க்கானம் ஆகியன இவரது காலத்தில் சிறப்புற்றிருந்தன எனலாம்.  ‘கபிலபரணர் என்றத் தொடர் பழைய இலக்கண உரைகளில் வந்துள்ளதுஇவர் பரணரை ஒத்தபுலவர் எனலாம்.
புறநானூறுகபிலர் பாடல்களில் புலப்பாட்டு நெறி
                மன்னன் வேள்பாரியின் நாடு பறம்பு நாடாகும்இம்மன்னன் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் வேள்பாரி எனப்பட்டார்பறம்பு நாடு என்பது பாண்டிய நாட்டுப் பறம்பு மலையைச் சூழ்ந்த பகுதியாகும்இந்தநாடு முந்நூறு ஊர்களைக் கொண்டதாகும்இன்று பறம்புமலைபிரான்மலை என அழைக்கப்படுகிறதுஇது புதுக்கோட்டையைச் சார்ந்ததாகும்வேள்பாரியைக் கபிலர் பாடியுள்ளார்பாண்டியநாட்டுத் திருவாதவ10ரில் பிறந்தவர்இவர்புலனழுக்கற்ற அந்தணானன் என மாறோகத்து நப்பசலையார் உரைத்துள்ளார்ஒரு சமயம் வறுமையில் வாடிய விறலியிடம் பாரியிடம் சென்று வேண்டும் பரிசில்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.
                கபிலர் வேள்பாரியைப் பாடிய பாடல்களில் அமைந்துள்ளப் புலப்பாட்டு நெறியைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறதுஒரு பாடலினுள் பொதிந்துள்ளக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக,புலப்படுத்துவதாக அமைவதைப் புலப்பாட்டு நெறி எனக் கொள்ளலாம்அந்த வகையில் கபிலர் பாடல்களில் அமைந்துள்ளக் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
நீரினும் இனிய சாயல் பாரி
                பெரிய அணையில் தழைத்த கரிய இதழ்கொண்ட நீலத்தின் வண்டுகள் மொய்க்கும் புதிய மலரில் குளிர்ச்சியான மழைநீர் பெய்யினும் பெய்யாவிடினும் கொள் விதைக்க உழப்பட்ட பரந்த நிலத்தில் நீரோடு வாய்க்காலாக ஓடும். வறிய காலத்தில் இவ்வாறு ஓடும் நீரைவிட மிக இனிய மென்மையான இயல்புடைய வேள்பாரியை பாடிச் சென்றால் நீ நல்ல அணிகலன்களை பெறலாம் என்று கபிலர் விறலியிடம கூறியுள்ளார்.
                இப்பாடலில் மழைபெய்யாத காலத்திலும் முன்பெய்த மழை நீரைத் தான் கொண்டு கோடையில் உமிழும் அருவிகளையுடைய மலை வேள்பாரியின் மலைஅந்த அருவிகள் கொள்ளை விதைக்க உழுதவரின் நிலத்தில ஓடுகின்றனமழை பெய்யாத போதும் அருவி ஓடும் என்றது வருவாய் குறைந்தாலும் பாரியின் கொடைக் குணம் குன்றமாட்டான் என்பதைப் புலப்படுத்துகிறதுபாரி இனியக் குணம் உடையவன் என்பதைநீரினும் இனிய சாயல் பாரி என்ற அடி புலப்படுத்துகிறது.
கொடுக்கும் கடமை உடையவன்
                எருக்கம்ப10விற்கு நறுமணம் இல்லாததால் நல்ல 10வகையிலும் சேராதுஇறைவனுக்கு அது சூட்டப்படுவதால் தீய 10வாகவும் கருதப்படாதுஅதுபோல சிறிதும் அறிவற்றவரும் அறிவுள்ளவரும் சென்றாலும் பாரி கொடுக்கும் செயலைக் கடமையாக உடையவன் என்கிறார் கபிலர்வேள்பாரி இரப்பவர் எத்தகையவராக இருந்தாலும் அவர்களுக்குக் கொடுக்கும் கடமை உடையவன் எனப் போற்றப்படுவதை,
                ‘நல்லவை தீயவும் அல்லகுவிஇணர்ப்
                புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
                கடவுள் பேணேம் என்னா ஆங்கு
                மடவர் மெல்லியர் செல்லினும்,
                கடவன் பாரி கைவண்மையே(புறம். 106)
எனும் பாடலில் புலப்படுத்தப்பட்டுள்ளது.
மாரியும் உண்டு
                புலவர் எல்லாம் பாரியையே புகழ்கின்றனர்இவ்வுலகைக் காக்கப் பாரி ஒருவன் மட்டுமல்ல் மாரியும் உண்டு என்பர்உலகைக் காக்க மழை இருக்க அதை புகழாமல் பாரியை மட்டும் ஏன் புகழ வேண்டும் என்று புலவர் கூறுவர்சில சமயம் மழை பெய்யாது போதலும் உண்டு. அத்தகையச் சிறுமைக்குப் பாரி இல்லைஅதனால் அம்மழையைப் பாராட்டுதலை விடுத்துப் பாரியை மட்டும் நெந்நாப் புலவர் புகழ்ந்தார் என்ற கருத்து இப்பாடலில் புலப்படுத்தப்பட்டுள்ளது. இதை,
                பாரி பாரி என்று பல ஏத்தி
                ஒருவற் புகழ்வர் நெந்நாப்புலவர்
                பாரி ஒருவனும் அல்லன்
                மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப்பதுவே (புறம். 107)
எனும் பாடல் காட்டுகிறது.
அவன் வாரேன் என்று சொல்லான்
                குறத்தி அடுப்பில் சந்தனமரத்தை எரித்ததால் அருகில் மலைச்சாரலில் இருக்கும் வேங்கையின் 10க்கொம்பில் சூழும்பறம்புமலை இப்படிப்பட்ட இயல்புடையதுபாடிய புலவர்களுக்கப் பங்கிட்டுக் கொடுத்ததால் அனைத்து ஊர்களையும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டான்எஞ்சியிருப்பது அவன் மட்டுமேயாகும்எவரேனும் இரந்து கேட்டால் தன்னையும் தந்து அவன் ஆணைப்படி நடப்பான் என்பது பாடலாகும்இப்பாடலில் சந்தனமரம் மட்டுமே பறம்புமலையில் உள்ளதால் குறத்தி அம்மரத்தை அடுப்பில் வைத்து எரித்தாள்; பகைவர் சுடும்புகை அங்கு இல்லை; பாரியைப் பகைவர் வெல்வது அரிது என்பதால் இரவலராக வந்து அவனையே பரிசிலாக பெற்றனர்அவனும் இரவலர்க்கு இல்லை என்று கூறாத அறம் உள்ளவராதலால் அவர் பின் சென்று கொலையுண்டான் எனும் கருத்துக்கள் இப்பாடலில் புலப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை,
                ………………..
                …….. அரும்புகை அயலது
                சாரல் வேங்கைப் 10ஞ்சினைத் தவழும்
                பறம்பு பாடினர் அதுவே அறம்ப10ண்டு
                பாரியும் பரிசிலர் இரப்பின்
                வாரேன் என்னான் அவர்வரையன்னே(புறம். 108)
எனும் பாடல் புலப்படுத்தியுள்ளது.
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே
                மூவேந்தர்கள் பாரி மகளிர் இருவரையும் பெண் கேட்க, பாரி தராததால் அவமானமுற்று ஒருவர் பின் ஒருவராக வந்து போரிட்டுத் தோற்றனர்அப்போது கபிலர் பறம்புமலை உழவரால் உழப்படாமல் இயற்கையில் மூங்கில், நெல், பலாக்கனி, வள்ளிக்கிழங்கு, தேன் ஆகியவை விளைவதால் மக்கள் அவற்றை உண்டு, அனைவரும் போருக்கு வருவர்பாரியைப் படைபலத்தால் வெல்ல இயலாதுநீங்கள் உங்கள் அரசு கோலத்தைக் கைவிட்டு இரவலராய் வந்து, யாழை வாசித்து, நல்ல மணம் கமழும் கூந்தலையுடைய உம் மகளிர் விறலியர் கோலம் கோண்டு பின்வர ஆடுவோரும் பாடுவோருமாகச் சென்றால் அவன் தன் நாட்டையும் குன்றையும் ஒருங்கே உங்களுக்குத் தருவான்.
                பல படைகளை உடையவராக, வலிமையான வீரர்களை உடையவராக இருந்தாலும் பாரியை வெற்றிபெற முடியாதுஅவன் கொடையாகத் தன்னையும் தருபவன்போர் மூலம் பெறமுடியாததை அவனது கொடையின் மூலம் பெறலாம் எனும் கருத்து இப்பாடலில் புலப்படுத்தப்பட்டுள்ளதஇதை,
                ‘………………………
                சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
                விரையொளி கூந்தல்நம் விறலியர் பின்வர
                ஆடினிர் பாடினிர் செலினே
                நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே(புறம். 109)
எனும் பாடல் காட்டுகிறது.
பாரியம் பறம்பு மலையும்
நீங்கள்; மூன்று மன்னர்களும் போரின் மூலம் பறம்பு நாட்டை வெற்றி கொள்ள முடியாதுபாரியின் முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பாடிப் பெற்றுச் சென்றுவிட்டனர்இனி இங்கு நானும் பாரியும் பறம்பு மலையும் மட்டுமே உள்ளோம்அவர்களைப் போல் நீங்களும் பாடி வந்தால் இம்மூன்றையும் பெறமுடியும் என்பதை,
                ‘முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
                யாமும் பாரியும் உளமே
                குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே(புறம். 110)
பறம்பு நாட்டில் இயற்கை உணவை அளிக்கிறதுஅதனால் மக்கள் அனைவரும் போரில் ஈடுபடுகின்றனர்அதனால் பறம்பு மலையை வெற்றி கொள்ள இயலாது எனும் கருத்துப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
எம்குன்றும் கொண்டார்
                வேள்பாரியை மூன்று மன்னர்கள் முற்றுகையிட்டு வஞ்சித்துக் கொன்றுவிட்ட காரணத்தால் அந்த இகழ்ச்சி புலப்படவென்றெறி முரசின் வேந்தர் என்றார்தந்தை இறந்தால் செயலற்றுப் பாரி மகளிர் வருந்திய வருத்தத்தைப் புலப்படுத்தும் புறநானூற்றுப் பாடல், அன்றைய முழுமதியின் வெண்மையான நிலவில் எம் தந்தையையும் யாம் உடையோம்எமது மலையை மற்றவர் கொள்ளவுமில்லைஇன்றைய முழுமதி வெண்மையான நிலவில் வெற்றி முரசையுடைய மன்னர் எம்மலையையும் கொண்டார்நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம் என்று பாரிமகளிர் கூறியுள்ளதைக் காட்டுகிறதுஅப்பாடல் வருமாறு,
                அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
                எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர் கொளார்
                 இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
                வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
                குன்றும் கொண்டார் யாம் எந்தையும்இலமே      (புறம். 112)
எனும் இப்பாடலில் பாரிமகளிர் தனது தந்தையை இழந்த நிலையில் அவரது நண்பரான கபிலர் அவரது பெண் மக்கள் இருவரையும் அழைத்துச் சென்று வேறோர் இடத்தில் இருக்கச் செய்தார். அங்கு வெண்ணிலவு குளிர்ச்சியான ஒளியைத் தந்தாலும் அது கண்ட மகளிர் போனமாதம் முழு நிலவு வந்தபோது தந்தை இருந்தார்ஆனால் இன்றைய இந்த நிலவு ஒளியின் போது எம் தந்தையை இழந்ததுடன் எமது குன்றுகளையும் இழந்து தவிக்கிறோம் என்பதைப் புலப்படுத்தியுள்ளார்.
விடைபெறுகிறேன்
                பாரி இறந்தப் பின்பு பாரிமகளிரை அழைத்துக் கொண்டு தக்காருக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கப் பறம்புமலையை விட்டுப் புறப்பட்டார் கபிலர்அப்போது பறம்பு மலையைப் பார்த்து, ‘முன்பு மதுச்சாடி எப்போதும் திறந்திருக்க, ஆட்டுக்கிடாய் எப்போதும் தேவைக்கேற்ப வெட்டிக்கொண்டிருக்க, ஊண் துவையல் தயார் செய்து கொண்டிருந்த இந்தப் பறம்பு மலையைவிட்டுப் பிரிகின்றேன்நீர்வடியும் கண்களையுடைய,திரண்ட வளையலணிந்த பாரிமகளை தக்கவருக்க மணமுடித்துக் கொடுக்க உன்னிமிருந்து விடைபெற்றுக் செல்கிறேன் என்றார்இதை,
                ‘………………….
                பாரி மாய்ந்தெனக் கலங்கி கையற்று
                நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிக்கச்
                சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே
                கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
                நாறுஇருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே                             (புறம். 113)
எனும் பாடல் காட்டுகிறதுஇப்பாடலில் பாரியிடம் கொண்டிருந்த நட்பு கபிலரை அம்மகளிரை அழைத்துக் கொண்டு,இவர்களின் கூந்தலை நுகரும் கணவனைத் தேடிச் செல்வதாகப் பறம்புமலையிடம் கூறுகிறார் கபிலர்பாரியிடம் கொண்டிருந்த நட்பை இப்பாடல் புலப்படுத்துகிறது.
பறம்பு மலை மறைகிறது
                பாரிமகளிரைக் கபிலர் அழைத்துக் கொண்டு செல்லும்போது பறம்புமலை கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறதுஅப்போது கபிலர், பறம்புமலை கண்ணுக்குப் புலனாக பாரி இருந்தபோது புகழால் உயர்ந்ததுகாணாதவர்க்கும் செவிப் புலனாகத் தோன்றியதுஆனால் இப்போது மற்ற மலைகளைப் போலக் கண்புலனுக்கு மட்டும் தோன்றுவதாயிற்றே என்று வருந்துவதை,
                ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை
                சென்று நின்றோர்க்கும் தோன்றும்  (புறம். 114)
எனும் பாடலில் புலப்படுத்துகின்றது.
கல் அலைத்து ஒழுகும் மன்னன்
                பாரி இறந்தபின்பு பாரிமகளிர் பறம்பு மலையை நினைத்துத் தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் கேட்ட கபிலர், பாரி வாழ்ந்த காலத்தில் பறம்புமலையின் ஒருபக்கத்தில் அருவி ஆரவாரத்துடன் ஒலித்து ஓடியதுமறுபுறம் பாணரின் தேவைக்குமேல் கொடுக்கும்போது சிந்திய தெளிந்த கள் கீழே சிந்தியக் கள் கல்லை உருட்டிக் கொண்டு சென்றதை,
                ‘………………
                பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
                வாக்க உக்க தேக்கள் தேறல்
                கல் அலைத்து ஒழுகும் மன்னே(புறம். 115)
எனும் பாடல் காட்டுகிறதுவேள்பாரி இருக்கும்போது எப்பொருளும் தேவைக்கேற்பவும் கூடுதலாகவும் வழங்கப்படும் என்பதை இப்பாடல் புலப்படுத்துகிறது.
வளநாடு வளம் குன்றியது
                பாரி மகளிரை அந்தணரிடத்து அடைக்கலப்படுத்திய பின்பு அப்பறம்பு நாட்டைக் கபிலர் காண நேர்ந்ததுஅவன் உள்ளபோது செங்கோலாட்சி சிறந்திருந்ததால் வயல்கள் நிறைந்து விளைந்தன் புதர்களில் மலர்கள் மலர்ந்தன் பசுக்கூட்டங்கள் புல்மேய்ந்தன் சான்றோர் பலர் வாழ்ந்தனர்; மழை பெய்வது தவறவில்லை; முல்லைக் கொடிகள் அரும்புகளை முகிழ்த்தன் தினை விளைந்தது; வரகு விளைந்தது; எள்விளைந்தது; அவரை விளைந்தது; சோறு சமைக்க மனைவி உண்கலங்களைக் கழுவுவாள், இத்தகய முந்தையப் பறம்பு நாடு இப்போது பொலிவிழந்துவிட்டதை,
                ‘………………..
                கோவுல் செம்மையின் சான்றோர்ப் பல்குப்
                பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே        (புறம். 117)
                வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
                தினை கொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்
                கொழுங்கொடி..                                (புறம். 120)
எனும் பாடல் வரிகள் காட்டுகின்றனபாரி இல்லாததால் பறம்புமலை அழியும் என்பதைச் சிறிய குளம் பாதுகாப்பவர் இல்லாது போனால் குளக்கரை உடைந்து நீர் வெளியேறி அழியும்அதுபோல பறம்பு நாடு பாரி இல்லாததால் அழியும் என்கிறார் கபிலர்இதை,
                ‘…………… கொடுங்கரைத்
                தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ  (புறம். 118)
எனும் பாடல்வரிகள் காட்டுகின்றன.

                கபிலரின் பாடல்களில் அக்காலத்தின் பறம்புமலை,பறம்பு நாடு எவ்வாறு செழிப்பாக இருந்தன,தான் காண்கின்ற இயற்கையை எப்படி பாரியோடு இணைத்துக் கண்டுள்ளார் என்பனவெல்லாம் கபிலரின் பாடல்களில் புலப்படுத்தப்பட்டுள்ளன.