மாணிக்கவாசகரின் இறைவழிச் சித்தரிப்பு
மாணிக்கவாசகரின்
இறைவழிச் சித்தரிப்பு
வீ.அம்பிகேஸ்வரி,
உதவிப்பேராசிரியை,தமிழ்த்துறை,
தேவாங்கர் கலைக்கல்லூரி,அருப்புக்கோட்டை.
முகவுரை:
'யாவ
ராயினும் அன்ப ரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்" (சென்னிபத்து - 1)
என
இறைவனைச் சுட்டுகிறார் மாணிக்கவாசகர். தாமியற்றிய திருவாசகத்தின் வழி தம் வரலாற்றைத்
தாமே எழுதிய அருள்வரலாறாக ஆன்மீக அனுபவங்களின் தொகுப்பாகத் திகழ்கிறது. இறைவனின் அடிதொழுது
வாழ்வதே பிறவியின் நோக்கமாக மாணிக்கவாசகர் அருளியிருப்பது இறைவனைச் சென்றடைவதே ஆகும்.
சூழ்ந்த இறையின்பத்தில் மூழ்கி இறைவனைத் தேடி அலைந்த அவரது பயணக்கதையே திருவாசகத்தில்
கூறப்படுகிறது. அவ்வாறே மாணிக்கவாசகரின் இறைவழிச் சித்திரிப்புச் செய்திகளை தொகுத்துக்
காணலாம்.
அழுது அடிஅடைந்த அன்பர்:
இறைவனை நினைத்து உருகி உருகிப் பருகிய மெய்யன்பர்
மாணிக்கவாசகர். இறைகாண முயலும் ஓர் உயிர் பேரொளியைத் தேடிச் செல்லுங்கால் நேரும் பலவகையான
நிகழ்ச்சிகளையே மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில் பாடியுள்ளார். அருளியலின் முடிவில்
உயிர் இறையின்பத்தை நுகரத் தன் தடைகளிலிருந்து நீங்கி முழுமையாகத் தூய்மை பெற வேண்டும்.
தூய்மையும் இறைநாட்டமும் பெற்ற உயிர் இறையின் அருள் நோக்கம் பெறும். அன்பே அருளியலின்
அடிப்படை. இடையில்லாமல் இறைவனை நினைந்து அன்பு நெறியில் நின்று அழுது அழுது அவனருள்
கொண்டு இறைவனைப் புணர வேண்டும் என்பதே மாணிக்கவாசகர் வலியுறுத்தும் விழுமிய அருளியற்
கருத்தாகும். ஆற்றல்மிக்க பேரன்புகொண்டு இறைவனை அழைத்து இறையடி எய்திய அன்பர் மாணிக்கவாசகர்
ஆவார்.
'ஆடகச்சீர் மணிக்குன்றே!
இடையறா அன்புனக்கு என்
ஊடகத்தே நின்றுருகத்
தந்தருள் எம்முடையானே!" (திருச்சதகம் - 11)
என்று
நிரந்தரமான அன்பினைää இடையிறா அன்பினைää உள்ளார்ந்த அன்பினை அருளுமாறு இறைவனிடம் வேண்டி
விரும்பிக் கேட்கிறார் மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகரின் இறை
அனுபவங்கள்
மாணிக்கவாசகரின் இறை
அனுபவங்கள் வெறும் தத்துவ உண்மைகள் மட்டுமல்லää இறைபியல் கருத்துக்கள் மட்டுமல்லää
அவை அவருடைய தூய இறை வாழ்வினின்று எழுந்த உயரிய உயிர் அனுபவங்களே ஆகும். வெறும் உணர்வாகவோää
கற்பனையாகவோää விருப்பமாகவோ அல்லாமல் உண்மையானவிழுமியää உயரியää பேரின்பம் சார்ந்த
அனுபவமே அவரது இறையனுபவம். இறைவனது கருணைத்தேன் விளைத்த இன்பத்தையும்ää அப்போது தன்
உடலுக்கு உண்டான இன்பநிலையையும் தெளிந்த சொற்களால்ää உணர்வு மொழிகளால்ää
'குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பைகொண் டின்தேன் பாய்த்து நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்.....................
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது
உள்ளங் கொண்டோர் உருச்செய் தாஅங்கு எனக்கு"(திருவண்டப்பகுதி
169 - 182)
அனுபவமாகவே
இப்பகுதியில் வடித்துக் காட்டுகிறார் மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகரின் இறைக்கொள்கை:
மாணிக்கவாசகரின்இறைக்கொள்கையை நான்கு கருத்துக்களில்
அடக்கலாம். அவைää
அறிவுக்கண்கொண்டோ ஐம்புலன்கள் கொண்டோ
நிறைவனைக் காணமுடியாது. அகக்கண் கொண்டு அன்பு நெறியில் நின்று உருகிய நிலையில் மட்டுமே
இறைவனைக் காண முடியும்.
இறைவனின் அருள்நோக்கம் பெற்ற ஓர்
உயிரே இறைவனை உணர முடியும். அவனருளாலே அவனை அடைய முடியும். உணரப்பெறுவதும்ää அருளப்பெறுவதும்
இறையனுபவமாகும்.
உயிர்களை ஈர்த்து ஆட்கொள்பவன் இறைவன்.
அன்பு வடிவான உயிரை அருள் நோக்கம் செய்து தன்னுள் வைத்துக்கொள்பவனே இறைவன்.
இறைவன் ஆதியும்ää அந்தமும் இல்லாதவன்.
மெய்ஞ்ஞானமாகிய மெய்ச்சுடர். ஆதலின்ää பல்பிணிச் சிற்றறிவுடைய உயிர்கள் எல்லா வகையிலும்
தூய்மையும்ää விழுப்பமும் சான்ற இறையைப் பற்றமுயலுதல் முறையே ஆகும். இவ்வாறுää மாணிக்கவாசகர்
தம் இறைக்கொள்கையை நான்கு நிலைகளில் வடித்துக்காட்டுகிறார்.
அருளியல் நிலைகள்
மாணிக்கவாசகரின் அருள் நிலையானது அவர்தம் இதயத்தினின்று
பீறிட்டுப் பொங்கி எழுந்ததே ஆகும். தம் இறை அனுபவங்களை ஆழ்ந்த தூய விழுமிய நுட்பமான உணர்வு மொழிகளில் வடிக்கிறார்.
அவரது அருளியல் நிலைகள் அறிவு நிலைகளாக இல்லாமல் பல்வகை உணர்வு அலைகளாக உள்ளன.
'யானே பொய் என்நெஞ்சும்
பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே" (திருச்சரகம் - 90)
என்று
திருச்சதகப் பகுதிகளிலிருந்து எடுத்துக்கூறும் செய்திகள் மாணிக்கவாசகரின் அருளியல்
நிலையானது உணர்வு நிலை மட்டுமல்லாது இறைவனைத் தேடும் மனப்போக்குகளின் உணர்வு அலைகளாகவும்
உள்ளன என்பதைக் காட்டுகிறது.
இறைகாணும் அறிவுக் கருத்துக்கள்:
மாணிக்கவாசகரின் பாடல்களில் ஆழ்ந்த இறை உணர்வே
மிகுந்துள்ளது என்பது உண்மையே. இருப்பினும்ää அவரது அருளியலில் அறிவுக்கும் ஓரளவு பங்கு
உள்ளது என்பதும் திண்ணமே. அவரது அருளியலில் காணப்படும் அறிவுக் கருத்துக்கள் உலகியலாரை
நோக்கிச் சொல்லப்படுவனவாய் உள்ளன. ஆழ்ந்த பொருண்மையும் தேர்ந்த விளக்கமும் உயரிய நலனும்
கொண்டு விளங்குகின்றன.
'உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்!
கற்பனவும் இனி அமையும்" (திருப்புலம்பல் - 3)
என்னும்
திருப்புலம்பல் பகுதியும் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும்.
நிறைவுரை
மாணிக்கவாசகரின் அருளியலில் மகிழ்ச்சி உண்டுää
அச்சம் உண்டுää நம்பிக்கை உண்டுää ஆழ்ந்த உணர்வுப் பெருக்கம் உண்டு. நுண்ணிய அறிவு
உருக்கமும் உண்டு. அவரது இறைவழிச் சித்திரிப்பை நோக்கும்போது அழுது அடி அடைந்த அன்பராகவும்ää
தமது உண்மையான இறை உணர்வோடுää அன்பு நெறியோடும்ääநான்கு வகையான இறைக்கொள்கையோடும் தமது
அருளியல் நிலைகளைத் திருவாசகத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை ஒப்புக்கொள்ளமுடிகிறது.
..................