வரலாற்றியல் நோக்கில் மதுரைக்காஞ்சி சுட்டும் இருபெரு நியமங்கள்
ச.கண்மணி
முதல்வர், தமிழ்த்துறைத்
தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி,சிவகாசி.
முன்னுரை:
மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியில் அவர் சுட்டிச் செல்லும் “ஒவுக் கண்டன்ன இருபெரு நியமத்துச்” என்ற தொடர் அறிவுறுத்தும் இரண்டு நியமங்கள் எவை என்பதை வரலாற்றியல்
நோக்கில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
செவ்வியல் இலக்கியங்கள்
இவ்வாய்வுக்குரிய முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. தமிழில் கிடைக்கம் பிற நூல்களும் களஆய்வும் துணைமை ஆதாரங்களாகும்.
மதுரைக் காஞ்சிக்கு உரையெழுதிய பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்
ஒவியத்தைக் கண்டால் ஒத்த காட்சியினை உடைய இரண்டாய பெரிய அங்காடித் தெருவின் கண் என்ற பதவுரையும் “இருவகைப்பட்ட அங்காடித் தெருவின்கண்” என்று கருத்துரையும் கூறுகிறார். (பத்து.2 பகுதி – பக். 129- 130) முனைவர். வி.நாகராசன், “ஓவியத்தைக் காண்பது போல் கண்ணுககு இனிமையைத் தரும் நாளங்காடி, அல்லங்காடி என்ற இரு கூற்றினை உடையதாகப் பெரிய அங்காடித் தெரு” என்கிறார். (பத்து – 2ம்பகுதி – பக்99) புலவர் அ.மாணிக்கனார்
‘ஓவியத்தைக் கண்டாற் போன்ற காட்சியை உடைய இரு அங்காடித் தெருவில்” என்கிறார். (பத்து 2
பகுதி –பக் 133) இவ்வுரைகள் சிலப்பதிகாரச் செய்தியோடு ஒத்துப் போகாமையே இந்த ஆய்விற்குக்
காரணமாக அமைகிறது.
பாண்டிய மன்னர் குடி,செங்கோன்மை,வெற்றி, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை சிறப்புக்ள நெடுஞ்செழியனின்
போர்வேட்கை வெற்றி அவனது முன்னோன் நிலந்தரு திருவிற் பாண்டியன் பெருமை, நெல்லூர்ப்போர், பாண்டிய நாட்டு ஊர்கள், நெடுஞ்செழியன்
கொடை, அவனைப் போற்றும் குறுநில மன்னர் இருக்கை, தலையாலங் கானத்துப் போர், கொற்கை, பரதவரை இடடக்கல, அவனது ஆணைச் சிறப்பு சான்றாண்மை போன்ற சிறப்புக்களைப் பாடி காஞ்சித்திணபை; பொருளை வலியுறுத்திய பின்னர் ஐந்து நில வளங்களை அணுகக் கொண்டு இருக்கும் வையைப் பேரியாறு, ஆற்றங்கரைப்
பாண் சேரி, ஆறு தழுவிக் செல்லும் மதுரை நகரின் அகழ் கோட்டையின் வாயில், அதன் உள்ளெழுந்த பேரொலி என்று வரிசை பெற அமையும் வருணனையில் அடுத்து வருவது இருபெரு நியமமும் திருவிழாக் கொடிகளும் ஆகும். அதைத் தொடர்ந்து மதயானை, தேர், குதிரை காலாண் மறவர் முதலிய படைகள் வந்து போகும் மதுரைத் தெருக்களில்
ஏழாம் நாள் புனித நீராட்டின் போது எழுந்த நாளங்காடி ஆரவாரம் பற்றிப் பேசப்படுகிறது. அதையடுத்து பெருநிதிக் கிழவர் வழிபாடு, மாலைப் பொழுதில் தெய்வங்கட்குப்
பலியிட்ட விழா ஆரவாரம், பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, சமணர் பள்ளி, அறங்கூறவைத்தர்
தெரு காவிதி மாக்கள் தெரு, வணிகர் தெருக்களில் எழுந்த அல்லங்காடி ஆரவாரம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நாளங்காடியையும்ää அல்லங்காடியையும் விரிவாக விதந்தோதுவதால் மாங்குடி மருதனார் கூறும் இருபெரு நியமம் என்பது இரண்டு ஆலயங்கள் என்பதும் அவ்வாலயங்களில் திருவிழா குறித்து கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன என்பதும் புலனாகிறது. இருபெரு நியமங்கள் இரண்டு அங்காடிகள் என்ற கொண்டால் கூறியது கூறல் எனும் குறையோடு பொருள் தொடர்நிலை தெளிவுற அமையவும் வழி இல்லை.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
ஊர்காண் காதையில் மதுரை நகரை வருணிக்கும் போது ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்’ (சிலம்பு.ஊர்.அடி.8) என்று திருமாலுக்குரிய ஆலயம் பற்றியே நியமம் என்ற சொல்லை எடுத்தாள்கிறார்.
பிங்கல நிகண்டு நியமம் என்ற சொல்லுக்கு கடைத்தெரு என்னும் பொருள் மட்டுமன்றி தெய்வம் வழிபடல் என்றும் பொருள் தருகிறது.
(சூத்திரம். 421 )
பிற சங்க இலக்கியங்களிலும் நியமம் என்ற சொல் ஆலயம் என்ற பொருளில் வழங்குகிறது.
கோசர் பண்டைத் தமிழகத்து மதுரையை அடுத்து செல்லூரின் கிழக்கே ஒரு நியமத்தை நிறுவினர். அங்கே கடவுள்மங்கல்
செய்த பொழுது வேள்வி நிகழ்;த்தினர் என்பது மதுரை மருதனிள நாகனாரின் அறநானூற்றுப்
பாடல்கள் மூலம் தெரிகிறது. (அகம். 90)
புண்டைத் தமிழகத்தில்
வழிபாட்டிடங்கள் ஐந்து வகைப்பட்டிருந்தன. அவை கோயில், நகர், நியமம்,கோட்டம், பள்ளி முதலியனவாம். வுழிபாட்டு முறையையும்,நிருமித்த சமூகத்தையும்,இடத்தையும், ஆற்றும் பணியினையும அடியொட்டி வழிபாட்டிடங்கள் வேறுபட்ட பெயர்களின் வழங்கின.
இளங்கோவடிகள் மதுரை நகரில் காலை முரசும் இயம்வி ஊர்துயிலெழுப்பிய இடங்களாக
‘நுதல் விழி நாட்டத்து இறையோன கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்” (சிலம்பு. ஊர். அடி. 7-11)
என்ற ஐந்திணை வரிசைப்படுத்தினார். இவை ஐந்தும் வழிபாட்டிடங்களே. ஆனால் அவை தம்முள் தெளிவான வேறுபாடு கொண்டு இலங்கின என்பதை சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் முதலியவற்றான்
நிறுவலாம்.
கோயில் என்பது வேதநெறிப்படி தீ முறை வழிபாடு நிகழ்ந்த இடமாகும். கோட்டம் என்பது வேதநெறியல்லாத மரபினைப் பின்பற்றும் ஆலயம் ஆகும்.
புறநானூறு முருகன் கோட்டம் பற்றிப் பேசுகிறது. (புறம். பா.299)
கலம் தொடா மகளிர் முருகன் கோட்டத்தில் ஒதுங்கி இருந்தது போலக் குதிரைகள் ஒதுங்கி நின்றன என்பதால் கோட்டம் என்ற வகையிலமையும் ஆலயத்தில் விலக்கான பெண்கள் கூட ஒதுங்கியிருந்தனர் எனத் தெரிகிறது.
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கோயில், கோட்டம் என்ற இரு பதங்களையும் பயன்படுத்தவில்லை. ஆனால் நகர் என்ற வகையினையும்
வேதமரபைப் பின்பற்றிய வழிபாட்டிடங்களையும். வேதநெறி அல்லாத மரபினைப் பின்பற்றி வழிபாட்டிடங்களையும் தனித்தனியாகப்
பட்டியலிடுகிறார். ஆலைவர், ஆவினன்குடி, ஏரகம் ஆகிய பகுதிகளில் முருகனுக்கு வேத முறைப்படி வழிபாடு நிகழ்ந்தது.
அலைவாயில் எழுந்தருளிய
முருகனின் ஆறுமுகங்களில்
ஒன்று வேள்வியை நோக்கிக் கொண்டிருந்தது
என்பதால் அது கோயிலே எனலாம்.
(திருமுருகு. அடி.
77-124) அலைவாயில் எழுந்தருளிய
முரகன் ஆறுமுகங்களுடன்
பன்னிரு கைகளுடன் காட்சியளித்தான். ஒரு முகம் மாயையிருள் அகல ஒளிவீசியது. இரண்;டாவது முகம் தன்னை வாழ்த்தும் அன்பர்கட்கு வரமருளியது. மூன்றாவது முகம் வேதநெறிப்பட்ட தீ முறை வழிபாட்டை நோக்கியது. நூன்காவது முகம் வீட்டின்பத்தைப் பக்தர்க்கு உணர்த்திக் காத்தது ஐந்தாவது முகம் பகையொழித்து விளங்கியது. ஆறாவது முகம் வள்ளியன் பால் காதல் பார்வை வீசியது. இவ்வாறு திருச்சீரலைவாயில் முருகன் காட்சியளித்த பெற்றியையும்ää அங்கு வேதநெறிப்படி தீ முறை நிகழ்ந்த தன்மையையும் நக்கீரர் வருணிக்கிறார்.
நகர் என்பது அரசக்குச் சொந்தமான நிலத்தில் பொது மக்களுக்காக மன்னன் அமைந்த ஆலயம் ஆகும். மேழி வலனுயர்த்தோன்
வெள்ளை நகரத்தில் காலை முரசொலி சங்கொலியுடன் கேட்டது என இளங்கோவடிகள்
மதுரையை வருணிக்கிறார்.
(சிலம்பு.ஊர்.அடி.6-14) பரிபாடல்
திரட்டு (பா.
1.அடி.49. 59- 63) “வரைகெழு செல்வன் நகர்”
“பூமுடி நாகர் நகர்”
“குளவாய் அமர்ந்தான் நகர்”
என்று மதுரையில் இருந்த ஆலயத்தைச் சுட்டுகிறது.
அறச்சாலையாகவும்ää கல்விச் சாலையாகவும் அமைந்த வழிபாட்டிடமே பள்ளி என்று அழைக்கப்பட்டது.
“அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி” (சிலம்பு. ஊர். அடி. 11) சமண பௌத்தப் பள்ளிகளைப் பொதுவாகச் சுட்டுகிறது. மணிமேகலை பௌத்தப் பள்ளியையும் அங்கு நிகழ்ந்த அறத்தையும் குறித்து விரிவாகப் பேசுகிறது. (காதை2: அடி
59-69) (காதை 18:அடி.7-8)
சமணர் பள்ளி சிலப்பதிகாரத்தில் சுட்டபபடுகிறது (சிலம்பு. இந்திர.அடி. 179 – 181) அந்தணர் பள்ளி பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்தில்
உண்டு. மதுரைக்காஞ்சி அடி.
474) இதுகாறும் கண்டவற்றுள்
பண்டைத் தமிழகத்தில்
ஐந்து வகை வழிபாட்டிடங்கள் இருந்தன என்பதும் அவற்றுள் நியமம் என்பது ஒன்று என்பதும் தெளிவாகின்றன.
மதுரைக்காஞ்சி சுட்டும் இருபெரு நியமங்களுள்
ஒன்று இன்றைய மீனாட்சி அம்மன் கோயில். மற்றொன்று இன்று தூண்டப்பட்டுச்
சுரங்கியிருக்கும் கூடலழகர் கோயில் ஆகும்.
சங்ககாலத்தில் ஆலவாய்க் கோயிலை (இன்றைய மீனாட்சி சுந்தரதேரஸவர்
கோயில்) வடகிழக்கு எல்லையிலும்
கூடலழகர் கோயிலை மேற்கெல்லையிலும் கொண்டிருந்த
மதுரை பின்னர் ஆலவாயினை ஊரின் நடுவடமாகக் கொண்டு விரிந்துள்ளது. இடைக்காலத்தில் ஆவிணி மூல விதியை அடுத்துக் கோட்டையுடன்;
கூடிய மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நாலாபுறமும்
விரிந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் அங்ஙனமே விரிந்து உள்ளது. அப்படி விரியும் போது இருபெரு நியமங்களுள் ஒன்றான் திருமாலின் ஆலயம் துணடாடப்பட்டுள்ளது.
கள ஆய்வின் போது இக்கோயில்கள்
அனைத்தும் நாம் நடந்து சென்று தரிசிக்கும்படியே உள்ளன. மதுரை மையப்பகுதியின்
வரைபடம் நம் கருதுகோளை உறுதிப்படுத்தி
ஒரு முடிவாக்குகிறது. இப்பகுதியில் மேலும் கள ஆய்வினை மேற்கொண்டால் இப்பெரு நியமம் பற்றிய உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.
முடிவுகள்:
எனவே மதுரைக் காஞ்சி சுட்டும் இருபெரு நியமங்கள் முறையே இன்றைய மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கோயிலும், கூடலழகர் கோயிலை உள்ளடக்கிய பெரிய திருமால் கோயிலும் ஆகும்.