திங்கள், 26 டிசம்பர், 2016

புறநானூறு – கபிலர் பாடல்களில் புலப்பாட்டு நெறி

புறநானூறுகபிலர் பாடல்களில் புலப்பாட்டு நெறி
முனைவர் வீ.மோகன்,
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ் உயராய்வு மையம்,யாதவர் கல்லூரி, மதுரை -14.

                கபிலர் பாண்டிய நாட்டு மதுரை நகருக்குக் கிழக்கில் உள்ள திருவாதவ10ரில் பிறந்தவர் என்ற செய்தி வழி வழியாக நிலவி வருகிறதுதிருவாதவ10ர்க் கல்வெட்டுக்கள்தென் பறம்பு நாட்டு வாதவ10ர் என்று குறிக்கின்றனஇப்பறம்பு நாடு வேள்பாரி என்ற வள்ளலுக்கு உரியதாய் இலங்கியதுபுலவர் கபிலர் வேள்பாரியிடம் நெருங்கிய நட்புக் கொண்டவராய் விளங்கினார்அவன் இறந்த பின்பு அவன் மக்களை அழைத்துச் சென்று மலையமான் திருமுடிக்காரியின் மைந்தர்க்கு மணம் முடித்து வைத்தார் என்பர்.
             

குறுந்தொகையில் தலைவன் - தலைவி - தோழி

குறுந்தொகையில் தலைவன் - தலைவி - தோழி
உறவு நிலைச் சித்திரிப்பு

முனைவர் சீ.காயத்ரி தேவி,
உதவிப் பேராசிரியை,தமிழ்த்துறை,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,பசுமலை, மதுரை - 4.

முகவுரை :
                சங்க இலக்கியத்துள் அகமன உணர்வை, தலைவன் - தலைவி எனும் பொதுச் சொல்லால் அமைத்து பெரிதும் வெளிப்படுத்துவது குறுகிய அடிகளாலான குறுந்தொகையே ஆகும். ஒத்த அன்பினால் தம் அகமன உணர்வால் ஒன்றிணைந்த தலைவன் - தலைவி தம் காதலில் வெற்றி கொண்டு கணவன் - மனைவியாக வலம்வரும் வெற்றியின் பின்புலத்தில் தோழியின் பங்கு மிகவும் பாராட்டுதற்குரியதாகும். அவ்வகையில், குறுந்தொகையில் தலைவன் - தலைவி - தோழி உறவுச் சித்திரிப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தலைவிதோழி நட்புணர்வு :
                தலைவனை விரும்பிய தலைவியின் காதல் வெற்றி பெறுவதற்குப் பெரிதும் துணை நிற்பவள் தோழி. தலைவி மீது தான் வைத்திருக்கும் உயரிய நட்புணர்வால் தலைவன் - தலைவி இருவரையும் திருமணத்தில் ஒன்றிணைப்பது தன் கடமையென்றே செயல்படுகிறாள் தோழி. தலைவி தன் உள்ளத்தில் உள்ள தலைவனைப் பற்றி தோழியிடம் கூறுவதன் மூலம் தன் கவலை நீங்கித் தலைவனோடு கற்பின் உயிர் நிலையில் இல்லற வாழ்வை அடைகிறாள்.
                ‘யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
                கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
                பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகளே!”- குறுந். 31
என்ற அடிகளின் மூலம், தலைவனோடு களவு மணம் புணர்ந்த தலைவி, அதனை வேறு யாரிடத்தும் கூறாது தோழியிடத்துக் கூறுவதை அறிகிறோம். தான் தலைவனோடு வைத்திருக்கும் அன்பை உரியவர்களிடம் உரிய முறையில் எடுத்துரைக்கும் பாங்கு தோழியால் மட்டுமே முடியும் என்று தலைவி நம்புவதையும் இதன் மூலம் உணர முடிகிறது. ஆக,தோழியானவள் தலைவன் - தலைவி ஆகிய இருவருக்கும் பாலமாகத் திகழ்வதைக் காணலாம்.
தலைவியைத் தோழி இடித்துரைத்தல் :
             

சிற்பி கவிதைகளில் தாய்மைப்புனைவு

சிற்பி கவிதைகளில் தாய்மைப்புனைவு
(கிராமத்து நதி)
.சரவணன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,ஒப்பிலக்கியத்துறை
தமிழியற்புலம்,மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை - 21
முன்னுரை
                தாய்மையைக் குறித்து சிலர் உயர்வாகப் பேசுவது உண்மையே அதை நடைமுறைப்படுத்துகிறபோது மனம் ஏற்க மறுத்துவிடுகின்றது. வெறுமனே வாய்ப்பேச்சாக இருந்துவிடாமல் அப்பெண்களை மேலும் மேலும் உயர்த்தவும் சக மனிதர்களைப்போல்  மதிக்கவும் மனிதநேயத்தோடும் பார்க்க வேண்டும் என்றும் போகப்பொருளாக காட்சிப்பொருளாக நினைப்பதைப் பெண்ணியக்கோட்பாட்டாளர்கள் உடன்படுவதில்லை என்பதையும் வலியுறுத்துகின்றன. ஆண்மக்களால் கட்டமைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு மாறுபட்டு நடக்க வேண்டும் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தீங்கு விளைக்கும் கட்டுப்பாடுகளைக் களைவதில் ஆணும் பெண்ணும் உடன்பாடு கொள்ள வேண்டும்.
தாலாட்டுப்பாடலில் பெண்களின் நிலை
தாலாட்டுப்பாடலில் பெண்கள் விரதத்திற்குச் செல்வதை ஆராயும்போது குழந்தையில்லை என்பது முதற்காரணம். இரண்டாவது காரணம் ஆண்குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

சங்க இலக்கியங்களில் மன்னன் - மக்கள் உறவுச் சித்தரிப்பு

சங்க இலக்கியங்களில் மன்னன் - மக்கள் உறவுச் சித்தரிப்பு
                                                                                        முனைவர் இரா. அன்பழகன்                                                                                 
 சைவ சித்தாந்த தத்துவத்துறை  
                                                                மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்                                                                                                                                  மதுரை-21.
சங்க இலக்கியங்களில் குறிப்பாக புறப்பாடல்களில் அரசனின் பண்பு மிகச் சிறப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாடல்களில் அரசன் இயற்கையோடும் பெற்ற தாய்க்கு நிகராகவும், இறைவனுக்கு ஒப்பாகவும், புனையப்பட்டுள்ளான். அரசன் வீரம், கொடை உள்ளம், மக்களைத் தாய்போல் பாதுகாக்கின்ற பரிவு, நீதி வழுவா நேர்மை எனப் பல்வேறு பண்புகளையும், ஒருங்கமையப்பெற்றவனாக அரசன் விளங்க வேண்டும் என இப்பாடல்கள் கருத்துரைக்கின்றன.
இயற்கையோடு மன்னன் உறவுகள்:
                அரசனின் ஆழுமையை அல்லது அவனது தகுதியை முறைப்படுத்துகின்ற புறப்பாடல்கள் அவனை இயற்கையோடு பொருத்தி விளக்குவது குறிப்பிடத்தக்கது. சான்றாக, சேரமான்பெருஞசோற்று உதயஞ்சேரலாதனை நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்ற ஐம்பெரும்பூதங்களின் இயற்கைபோல பொறை,சூழ்ச்சி, வலி, திரள், அளி என்ற ஐந்தும் உடையவன் இவன் என்று பொருத்திக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
                “மண்டிணிந்த நிலனும்
                நிலனேந்திய விசும்பும்
               

பயண இலக்கியம் காட்டும் உறவுச் சித்திரிப்பு

பயண இலக்கியம் காட்டும் உறவுச் சித்திரிப்பு
ஜா.அருள் சுனிலா,
முனைவர் பட்டஆய்வாளர்,தமிழ் உயராய்வுமையம்,
பாத்திமா கல்லூரி,மதுரை-18.
பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பயணமானது ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. பண்டைக் காலங்களில் மனிதன் உணவைத் தேடிப் பயணித்தான். நாகரிகம் சிறிது வளர்ந்த காலத்தில் உடை,உறைவிடம் இவற்றைத் தேடித் தன் பயணத்தை விரிவுபடுத்தினான். காலம் செல்லச் செல்ல மனிதனின் அறிவும் சிந்தனையும் மேம்படத் துவங்கின. அதன் விளைவாகப் பல நாடுகளுக்கும் சென்று தன் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடன் பயணத்தை மேற்கொண்டான். இத்தகைய  பயணத்தைப் பலர் பதிவு செய்துள்ளனர். தாம் கண்டவைகளையும் கேட்டவைகளையும் ஓவியமாகவும் பாடலாகவும் படைத்தார்கள். இம்முயற்சிகள் செம்மை பெற்றுப் பயண இலக்கியமாக வடிவம் பெற்றுள்ளன. இப்பயண இலக்கியப் படைப்புகளில் பயணத்தால் விளைந்த நல்ல நட்புறவுகளையும் காண முடிகின்றன.
உறவினர்களைச் சந்தித்தல்:
பயணம் செய்பவர்கள் பல்வேறு வித நோக்கங்களோடு பயணம் செய்தாலும்; தாங்கள் செல்லும் நாடுகளில் வாழும் நண்பர்கள் உறவினர்களைச் சந்தித்து,அவர்களோடு தங்கி வருவதும் ஒரு குறிப்பிட்ட செயலாகவே உள்ளது.
சிவசங்கரி,புதிய சுவடுகள் எனும் தனது பயணநூலில்  தன்னுடைய உறவினர்களைக் கண்டு மகிழ்ந்ததைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.பி.ஜெயப்பிரகாசம்,தனது மகள் மருமகனுடன் அமெரிக்காவில் ஒன்றாக வாழ்ந்த அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.
உறவுகளோடு சேரும் போது லேசாக மிதக்கிற இதயம், பிரியும் போது கனக்கிறது. இன்னும் இரண்டு நாள் இருந்திருக்கலாம்? என முனகிக் கொண்டே விழியோரம் அரும்பிய நீரைத் துடைத்துக் கொண்டே விடை கொடுத்தாள் மகள்
(அமெரிக்கா வந்தேறியவர்களின் வளநாடு .37).

மாணிக்கவாசகரின் இறைவழிச் சித்தரிப்பு

மாணிக்கவாசகரின் இறைவழிச் சித்தரிப்பு

வீ.அம்பிகேஸ்வரி,

உதவிப்பேராசிரியை,தமிழ்த்துறை,

தேவாங்கர் கலைக்கல்லூரி,அருப்புக்கோட்டை.

முகவுரை:

            'யாவ ராயினும் அன்ப ரன்றி

            அறியொ ணாமலர்ச் சோதியான்"  (சென்னிபத்து - 1)

என இறைவனைச் சுட்டுகிறார் மாணிக்கவாசகர். தாமியற்றிய திருவாசகத்தின் வழி தம் வரலாற்றைத் தாமே எழுதிய அருள்வரலாறாக ஆன்மீக அனுபவங்களின் தொகுப்பாகத் திகழ்கிறது. இறைவனின் அடிதொழுது வாழ்வதே பிறவியின் நோக்கமாக மாணிக்கவாசகர் அருளியிருப்பது இறைவனைச் சென்றடைவதே ஆகும். சூழ்ந்த இறையின்பத்தில் மூழ்கி இறைவனைத் தேடி அலைந்த அவரது பயணக்கதையே திருவாசகத்தில் கூறப்படுகிறது. அவ்வாறே மாணிக்கவாசகரின் இறைவழிச் சித்திரிப்புச் செய்திகளை தொகுத்துக் காணலாம்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

வரலாற்றியல் நோக்கில் மதுரைக்காஞ்சி சுட்டும் இருபெரு நியமங்கள்

வரலாற்றியல் நோக்கில் மதுரைக்காஞ்சி சுட்டும் இருபெரு நியமங்கள்
.கண்மணி
முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி,சிவகாசி.
முன்னுரை:
     மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியில் அவர் சுட்டிச் செல்லும் ஒவுக் கண்டன்ன இருபெரு நியமத்துச் என்ற தொடர் அறிவுறுத்தும் இரண்டு நியமங்கள் எவை என்பதை வரலாற்றியல் நோக்கில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
      செவ்வியல் இலக்கியங்கள் இவ்வாய்வுக்குரிய முதன்மை ஆதாரங்களாக அமைகின்றனதமிழில் கிடைக்கம் பிற நூல்களும் களஆய்வும் துணைமை ஆதாரங்களாகும்.
மதுரைக் காஞ்சிக்கு உரையெழுதிய பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் ஒவியத்தைக் கண்டால் ஒத்த காட்சியினை உடைய இரண்டாய பெரிய அங்காடித் தெருவின் கண் என்ற  பதவுரையும் இருவகைப்பட்ட அங்காடித் தெருவின்கண் என்று கருத்துரையும் கூறுகிறார்.  (பத்து.2 பகுதி பக். 129- 130) முனைவர். வி.நாகராசன், ஓவியத்தைக் காண்பது போல் கண்ணுககு இனிமையைத் தரும் நாளங்காடி, அல்லங்காடி என்ற இரு கூற்றினை உடையதாகப் பெரிய அங்காடித் தெரு என்கிறார்.  (பத்து 2ம்பகுதி பக்99) புலவர் .மாணிக்கனார் ஓவியத்தைக் கண்டாற் போன்ற காட்சியை உடைய இரு அங்காடித் தெருவில் என்கிறார். (பத்து 2 பகுதி பக் 133) இவ்வுரைகள் சிலப்பதிகாரச் செய்தியோடு ஒத்துப் போகாமையே இந்த ஆய்விற்குக் காரணமாக அமைகிறது.
    

பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ் – பகுப்பாய்வு

பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ் பகுப்பாய்வு
jpUkjp.nr.rhe;jp>
KJfiyj; jkpo;j;Jiw cjtpg;NguhrphpaH>
tp.,.eh.nr.eh.fy;Y}hp> tpUJefH.
   
ghl;bay; E}y;fshy; tiuaWj;Jf; $wg;gl;l rpw;wpyf;fpa tiffSs;  gps;isj;jkpOk; xd;W.
Fotp kUq;fpDk; fpotjhFk;1                (njhy;.1030)
    vd;Dk; njhy;fhg;gpa E}w;ghthdJ> jhk; tpUk;Gk; flTisNah> nghpNahiuNah> Foe;ijahfg; ghtpj;J mtHjk; rpwg;Gfis vLj;Jiug;gJ gps;isj;jkpohFk; vd;W ,yf;fzk; $WfpwJ. ghl;Lilj; jiykf;fspd; ngUikfisg; gj;Jg; gUtq;fshfg; gFj;Jg; gUtj;jpw;Fg; gj;Jg; ghly;fs; tPjk; nkhj;jk; E}W ghly;fshy; ghlg;gLtJ kughFk;. ,J Mz;ghw; gps;isj;jkpo;> ngz;ghw; gps;isj;jkpo; vd ,Utifg;gLk;. fhg;G> nrq;fPiu> jhy;> rg;ghzp> Kj;jk;> tUif> mk;Gyp vd;gd ,Ughw; gps;isj;jkpOf;Fk; nghJthd VO gUtq;fshfTk;> rpw;wpy;> rpWgiw> rpWNjH vd;gd Mz;ghw; gps;isj;jkpOf;Fk;> foq;F (mk;khid)> ePuhly;> Cry; vd;gd ngz;ghw; gps;isj;jkpOf;Fk; ,Wjpapy; mikAk; %d;W gUtq;fshfTk; mikfpd;wd.

சனி, 24 டிசம்பர், 2016

குறிஞ்சிப்பாட்டு - வாசிப்பும் நேசிப்பும்

குறிஞ்சிப்பாட்டு - வாசிப்பும் நேசிப்பும்
முனைவர்(திருமதி).இன்பரதி,
தமிழ்த்துறைத் தலைவர்இணைப்பேராசிரியர்,
வே..வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர்.

                            சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகளின்படி தலைவியின் களவொழுக்கத்திற்கு உறுதுணையாக நின்ற தோழி காலங்காலமாகப் போற்றப்பட்டு வருகிறாள். ""தோழி அறத்தொடு நிற்குங்காலம் பெற்று அறத்தொடு நிற்புழித் தலைவியின் குடிப்பிறப்பிற்கும், கற்பு, நாண் முதலியவற்றிற்கும் செவிலியின் அறிவிற்கும், தலைவன் பெருமைக்கும், தன் பாதுகாவலுக்கும் மாறுபடாதவாறு நிற்றல் வேண்டும், என்னும் நுணுக்கமான வரையறைகளும் உள்ளன. இவ்வரையறைகள் இந்நூலில் பெரிதும் போற்றப்பட்டுள்ளன. இவை தமிழரின் சிறந்த நாகரிகத்தை விளக்கப் போதிய சான்றுகளாம் என்க.'' (உரைப்பாயிரம்) என்று குறிஞ்சிப்பாட்டின் உரைப்பாயிரம் அவளைப் பாராட்டுவதால் இன்றுவரை நாமும் தோழியைப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். அவளது உளவியல் திறனை வியந்து கொண்டிருக்கிறோம். சமுதாயப் பண்பாட்டுக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தலைவனைப் பற்றியும்  நாம் ஏதும் பேசாமல் விடுகிறோம். தலைவனையும், தோழியையும்  புதிய அணுகுமுறையோடு நோக்குவோம்.
அறத்தொடு நிற்றலில் அவள் பங்கு பெரிதா? பாராட்டத்தகுந்ததா? என்பதைத் தக்க சான்றுகளுடன் ஆராய்வோம்.